1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:34 IST)

மனைவியின் விரலை கடித்து மென்று தின்ற கணவன்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Fingers
பெங்களூரில் கணவர் தனது மனைவியின் விரலை கடித்து தின்று விழுங்கியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெங்களூரை சேர்ந்த விஜயகுமார் புஷ்பா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் சமீபத்தில் இரண்டாவது மகன் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் திடீரென விஜயகுமார் புஷ்பா இடையே சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் கலகலப்பு ஏற்பட்டதாகவும் அதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவியின் இடது கை விரலை வாயால் கடித்து  மென்று தின்றதாகவும் தெரிகிறது. 
 
இதனை அடுத்து வலியால் துடைத்த புஷ்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தற்போது அவருக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மனைவியின் விரலை கடித்த  கணவர் விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran