1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anbumani ramadoss wishes to students

புதிய கல்வியாண்டு அறிவைம் பெறும் ஆண்டாக அமையட்டும்: அன்புமணி வாழ்த்து

Anbumani
இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய கல்வியாண்டு அறிவைம் பெறும் ஆண்டாக அமையட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிய வகுப்புகளுக்கு மாணவச் செல்வங்கள் திரும்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய 2023 ஆவது கல்வியாண்டு சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
 
2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கின்றன. இடைப்பட்ட ஆண்டுகளில் கொரோனா பரவலால் மாணவர்கள் இழந்தவை ஏராளம். அவை கடந்த காலங்களாகட்டும். புதிய கல்வியாண்டு கல்வியையும், எல்லையில்லா அறிவையும் பெறும் ஆண்டாக அமையட்டும்!
 
 
அடுத்த கட்டுரையில்
இந்து மதம் ஏன் வளரவில்லை: திருமாவளவன் கேள்விக்கு நாராயணன் திருப்பதி பதிலடி