திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (07:11 IST)

நீங்களும் பல்லைத்தானே காட்டுகிறீர்கள்: அமைச்சர் உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

நாங்கள் செங்கலை காட்டுகிறோம், நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள் என்று பிரதமர் மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டிய நிலையில் நீங்களும் பல்லை தானே காட்டுகிறீர்கள் என்று பிரதமர் மோடியுடன் உதயநிதி ஸ்டாலின் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமி மக்கள் முன் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் சிரித்த படத்தை எடுத்துக் கொண்டு பல்லை காட்டுவதாக அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார். அப்போ நான்  பல்லை   காட்டுகிறேன் என்றால் நீங்களும் அதை தானே செய்திருக்கிறீர்கள். இதற்கு பெயர்தான் கள்ளக் கூட்டணி என்று பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்தித்தபோது எடுத்த படத்தை காட்டி எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கின்றார்.

இந்த பதிலடியை உதயநிதி எதிர்பார்க்க மாட்டார் என்றாலும் இதற்கு என்ன கூறி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

Edited by Siva