1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:03 IST)

ரஜினியின் சர்ச்சை கருத்துக்கு ஆனந்த்ராஜ் ஆதரவு!

ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் ஆனந்த்ராஜ், காவல்துறைக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
காவிரிக்காக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராடிய போது காவல்துறையினர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அப்போது ரஜினி, சீருடையில் இருக்கும் காவல்துறையினர் தாக்கப்படுவது வன்முறையின் உச்சக்கட்டம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
பாரதிராஜா ரஜினியின் இந்த கருத்தை கேட்டு ஆவேசமடைந்தார். ரஜினி கடுமையாக விமர்சனம் செய்தார். இன்று நடிகர் ஆனந்த்ராஜ் திடீரென ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-
 
தமிழக மக்கள் மீது ரஜினி அக்கறை வைத்து உள்ளார். பொது வாழ்வுக்கு வந்த பின் மக்களுக்காக குரல் கொடுக்கிறார். காவல்துறைக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன். பாராதிராஜா விமர்சனம் சரியில்லை. ரஜினியை குறிவைத்து தாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.