வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 ஏப்ரல் 2018 (10:19 IST)

ரஜினியை திடீரென சந்தித்த ஆனந்த்ராஜ்: கட்சியில் சேருகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளார். அவரது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், தமிழகத்தில் தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலை காரணமாகவே அவர் தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் உள்ளார். இருப்பினும் ஜூன் மாதத்தில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.
 
இந்த நிலையில் ரஜினியுடன் பாட்ஷா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ், இன்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.
 
இருப்பினும் ரஜினியின் கட்சியில் ஆனந்த்ராஜ் சேருவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவிகள் கொடுக்கப்படும் என்றும் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்