வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (16:00 IST)

ரஜினியை விமர்சிப்பவர்கள் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேற்று இயக்குனர் பாரதிராஜா, அவர் கர்நாடக காவிகளின் தூதுவர் என்று விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் சரிதான் என்று நாம் தமிழர் கட்சியின் சீமானும் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
 
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை பாஜகவுடன் ஒப்பிட்டு பேசுவோர் அந்நிய சக்திகளின் தூதுவர்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 
தமிழிசையின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.