1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (17:36 IST)

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் மனு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி இடமும் விசாரணை செய்ய வேண்டுமென புகழேந்தி மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆறுமுகசாமி ஆணையம் சென்று வாக்குமூலம் அளித்தார் 
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல விஷயங்கள் தெரிந்திருக்கும் அவரை விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அப்போலோ நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்
 
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் புகழேந்தி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது