செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (15:05 IST)

அம்மா உணவகத்தில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்க கோரி மனு!

தென்காசி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இதற்கான பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றிருந்தது. 
 
தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதலில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த நேரத்தில் தேர்தல் விதிமுறையையொட்டி இந்தப்படம் மறைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படம் அகற்றப்பட்டது. அப்போது இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. அதிமுக நகர கழக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் அம்மா உணவகத்தில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்க கோரி மனு அளித்தனர்.