வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (09:24 IST)

சிறுமி பாலியல் பலாத்காரம் - அதிமுக முன்னாள் கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியே அனுப்பவே பயப்படும் சூழல் உருவாகி வருகிறது.
 
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(50). இவர் அந்த பகுதியின் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
 
நேற்று தங்கராஜ் வீட்டினருகே அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த தங்கராஜ், சிறுமியை அழைத்து எனது வீட்டில் சாக்லெட் இருக்கிறது. உள்ளே வந்தால் சாக்லெட் சாப்பிடலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி தங்கராஜ் வீட்டினுள் சென்றது.
 
இதனையடுத்து அந்த காமுகன் சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்துள்ளான். பின் இதனை வெளியில் யாரிடனும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளான். வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
அதிர்ந்து போன பெற்றோர்கள் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக தங்கராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.