திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (14:25 IST)

நண்பனோடு சேர்ந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய கணவன்

மகாராஷ்டிராவில் கணவன் ஒருத்தன் மனைவியை தனது நண்பனோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம்  பன்வெல் நகரை சேர்ந்தவன்  ராகேஷ்(29). இவனுக்கு திருமணமாகிவிட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மனைவியை பிரிந்து வாழ்கிறான்.
 
இந்நிலையில் ராகேஷ் தனது மனைவிக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் வீட்டிற்கு வா என கூறியுள்ளான். இதனை நம்பிய அவனது மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராகேஷ் தனது மனைவிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்ததை கலந்து கொடுத்துள்ளான். 
பின் கேடுகெட்ட செயலாய் நண்பனோடு சேர்ந்து தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளான்.  இதனை வெளியே கூறினால்  வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான்.
 
துவண்டுபோகாத அவனது மனைவி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை காவல் நிலையத்திற்கு சென்று புகாராக அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியன் ராகேஷையும் அவனது நண்பனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.