புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (11:37 IST)

தூக்கி எறியப்பட்ட அம்மா உணவகங்களின் போர்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

தூக்கி எறியப்பட்ட அம்மா உணவகங்களின் போர்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி பதவி ஏற்க இருக்கும் நிலையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்களின் போர்டுகள் தூக்கி எறியப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் உள்ள ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தி போர்டுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் தூக்கி எறிந்து விட்டதாகவும் இனிமேல் அம்மா உணவகம் இல்லை, இது கலைஞர் உணவகம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்த வீடியோக்கள் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் வெளியாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர்ந்து இயங்குமா? அல்லது அம்மா உணவகம் கலைஞர் உணவகம் என பெயர் மாற்றம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்