1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Hotel owners requesting to eat in hotels

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வேண்டும்… உரிமையாளர்கள் வேண்டுகோள்!

அம்மா உணவகம்
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக அரசு இன்றுமுதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுத்து பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி சமூக இடைவெளியோடு அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கவேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளியோடு அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.