திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (09:04 IST)

அம்மா உணவகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது… காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட அம்மா உணவகம் சுமார் 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மருத்துவமனை அருகில் இருப்பதால் அதிகளவில் கூட்டம் வரும் அம்மா உணவகமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை உணவகத்தை திறக்க வந்த போது உணவகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இரவு நேரத்தில் நடந்த விபத்து என்பதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.