ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (12:16 IST)

காரைக்குடியில் அமித்ஷா நடத்த இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து! என்ன காரணம்?

Amitshah
காரைக்குடியில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்த இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த நிலையில் சென்னை பாண்டி பஜார் பகுதியில் பிரம்மாண்டமான ரோடு ஷோ நடந்தது என்பதும் இரு பக்கமும் ஏராளமான பொதுமக்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் அடுத்ததாக தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்ய வரும் நிலையில் நாளை காரைக்குடியில் பிரமாண்டமான ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் இந்த ரோடு ஷோ தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இருப்பினும் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்படவில்லை என்றும் அவரது பிரச்சார திட்டத்திலும் வேறு மாற்றம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் 525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சியை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran