1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (12:08 IST)

பாஜக தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல, மக்கள் தரிசன யாத்திரை: அண்ணாமலை

Annamalai
பாஜக தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல, மக்கள் தரிசன யாத்திரை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

மக்களை தரிசிப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். பாஜக தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல,  மக்கள் தரிசன யாத்திரை.

தமிழகத்தில் பிரிவினை சக்திகள் ஒடுக்கப்படுவார்கள் என்பது மோடியின் உத்தரவாதம், பாஜக மீது கடந்த 50 ஆண்டுகளாக போலியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, பாஜக மீது உருவாக்கப்பட்ட பிம்பம் 2024 தேர்தலுக்கு பின் சுக்குநூறாக உடைந்து போகும்.

எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ போய் பார்க்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி ரோடு ஷோ நடத்தினால் எத்தனை பேர் வருவார்கள்? பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தினால் கூட்டம் வராது என்று அண்ணாமலை கூறினார். பிரதமர் மோடியின் ரோடு ஷோ குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்த நிலையில் அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva