ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:39 IST)

பாஜகவில் இணைந்த அமைப்பினர்

அண்ணாமலை தலைமையிலான தமிழ் நாடு பாஜகவில்  பல்வேறு அமைப்பினர் இன்று பாஜகவில் இணைந்தனர்.

பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இதையொட்டி பாஜக, காங்கிர, திமுக, அதிமுக,  நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்குப் போட்டியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, த.மா.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
 
இந்த நிலையில், பல்வேறு அமைப்பினர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
 
அதாவது, தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் கண்ணதாசன், தென்னிந்திய இஸ்லாமியர் மக்கள் எழுச்சிக் கழக நிறுவனத் தலைவர் சுல்தான் ஜி. யாதவர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புமாறன், அனைத்து வெள்ளாளர் பிள்ளைமார் மகாசபை மாநில இளைஞரணி செயலாளர் திரு குமரன், ஆகியோர் திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.