1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (08:04 IST)

கந்துவட்டி நெருக்கடி - நடவடிக்கை எடுப்பதாக PTR பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

உண்மையில் கந்துவட்டி நெருக்கடி என்பது கொடுமையான செயல், உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பேட்டி. 

 
தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு தவணையாக வழங்கப்படும் என  அறிவித்திருந்த நிலையில், இரண்டாவது தவணைக்கான 2000 ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தானப்ப முதலியார் தெருவில் உள்ள நியாய விலை கடையில் தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
 
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது, தமிழக அரசு தேர்தலின் போது வாக்குறுதியாக ஜூன் மாதத்திற்குள் 4000ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்ததை தற்போது நடைமுறைப்படுத்தி கொண்டு வருவதாக கூறினார். இதற்காக மொத்தமாக 9,000 கோடி ரூபாய் செலவிலும், தற்போது இரண்டாவது தவணையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
 
மதுரையில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது குறித்த கேள்விக்கு கந்து வட்டியை பிரச்சினையில் தவறு கண்டறியப்பட்டால் அந்த கொடுஞ்செயலுக்காக  சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையெனில் கடுமையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.