திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (07:06 IST)

அமித்ஷாவை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் உபி முதல்வர்!

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும் பாஜக தலைமைக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் கலந்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜித்தா பிரசாத் பாஜகவில் இணைந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது
 
மேலும் நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி, பாஜக தலைவர் ஜேபி நட்டா அவர்களையும் சந்திக்கவுள்ளார். இந்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்த தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன