சயின்ஸ் பிக்சன் கதையை கையில் எடுக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ இயக்குனர்!
சயின்ஸ் பிக்சன் கதையை கையில் எடுக்கும் சூப்பர் டீலக்ஸ் இயக்குனர்!
ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா என்பது அறிந்ததே. கடந்த 10 ஆண்டுகளில் இவர் வெறும் இரண்டு படங்களை மட்டுமே இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அவர் தனது மூன்றாவது படத்திற்கு தயாராகி விட்டதாகவும் அந்த படத்தின் கதையை அவர் எழுதி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் இதுவரை தமிழில் வெளிவராத வகையில் இருக்கும் சயின்ஸ் பிக்சன் கதை என்றும் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதுமையாக இந்த கதை இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த படத்தின் இந்த திரைக்கதை எழுதும் பணியை தற்போது அவர் தொடங்கியுள்ளதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் திரைக்கதை எழுதும் பணி முடிந்தவுடன் நடிகர்-நடிகைகள் தேர்வு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.