வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் தலைவர்களின் இந்த மாநில பயணங்கள் அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
வேலூரில் நடைபெற உள்ள ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் அமித்ஷா, அந்த நிகழ்வுக்கு பின்னர் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் கூட்டணி விரிவாக்கம், எதிர்வரும் தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், ஓ.பி.எஸ். அவர்களும் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக, அமித்ஷாவின் நேரடித் தமிழக வருகை, மாநில பா.ஜ.க.வில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், கூட்டணி சமன்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran