செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:37 IST)

அதிமுக அணிகள் இணைவதால் பாஜக தலைவர் வருகை திடீர் ரத்து

அதிமுகவின் இரு அணிகள் இணையும் நேரத்தில் அமிஷ்தா வருகை தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தலாம் என அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


 

 
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருவதாக இருந்தது. 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவரது வருகை கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   
 
ஏற்கனவே அதிமுக கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ளது. இந்நிலையில் அமிஷ்தா வருகை தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.