ஆதரவாளர்களை அவசரமாக அழைத்த ஓபிஎஸ்: இன்று இணைப்பு நிச்சயமா?


sivalingam| Last Modified திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (06:04 IST)
அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணைவது நிச்சயம் என்றே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.


 
 
ஒருபக்கம் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் இன்று சென்னைக்கு அவசரமாக அழைத்துள்ளார். இன்னொரு பக்கம் ஈபிஎஸ், இன்று அதிமுக தலைமையகத்தில் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
 
இன்றைய கூட்டத்தில் அதிமுகவின் விதிகள் மாற்றப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவியை காலி செய்வது உள்பட ஒருசில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
 
அமீத்ஷாவின் சென்னை வருகைக்கு முன்பே அணிகள் இணைந்து அவர் முன் ஒருங்கிணைந்த அதிமுகவினர் சந்திப்பார்கள் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :