1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. TN election soon: BJP will lead in election

பாஜக தலைமையில் பிரமாண்ட கூட்டணி: தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்

bjp
அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைவது உறுதி என்றும் அமித்ஷாவின் தமிழக வருகைக்கு முன்னர் ஒரே அதிமுக என்ற நிலை ஏற்படும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் ஆட்சியை எந்த நேரமும் தினகரன் கவிழ்த்துவிடுவார் என்ற நிலை இருப்பதால் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு பாஜக அறிவுறுத்தியுள்ளது.



 
 
இந்த தேர்தலை பொறுத்தவரை பாஜக தலைமையில் தான் கூட்டணி. அதிமுக எத்தனை தொகுதியில் நிற்கவேண்டும் என்பதை கூட பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும். நிர்மலா சீதாராமன் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரே இனி தமிழக பாஜகவை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது
 
மேலும் பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தாமக மற்றும் பாமக இணையவும் வாய்ப்பு உள்ளதகவும் இதற்கான ரகசிய பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் என்றும் முதல்வர் அதிமுகவில் இருந்தாலும் மற்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
தேசியகீதம் பாடும்போது எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் கைது!