வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (10:39 IST)

மாநில அரசுக்கு தனி அதிகாரம் இருந்திருந்தால் 7 பேர் விடுதலையாகி இருப்பார்கள்: அமீர்

மாநில அரசுக்கு தனி அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் பேரறிவாளன் உள்பட  7 பேர் விடுதலை செய்யப்படிருப்பார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்தார்.
 
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்  நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள்.  இவர்களை விடுவிக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசும் 7பேரை விடுவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இருப்பினும் மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த குற்றவாளிகளுக்கு  ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதே சலுகை தான் என்றும் மேலும் ஒரு சலுகையாக விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்து வருகிறது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க  அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது.


























இந்நிலையில் கும்பகோணத்தில் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாநில  அரசுக்கு என தனியாக அதிகாரம் இருந்திருந்தால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கும் என்றார்.