செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (18:57 IST)

என்ன கொடுமைடா இது! மகள் வயது நடிகையுடன் அமீர் கானுக்கு கள்ளக்காதலா..?

பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகராகவும் , சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகவும் திகழ்பவர்  நடிகர் அமீர் கான்.



இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் தற்போது தங்கல் படத்தில் அமீர் கானுக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்வுடன் அமீர் கான் கள்ள காதலில் இருப்பதாக பாலிவுட்டில் ஒரு செய்தி தீயாக பரவியது. 
 
பாத்திமா சனா ஷேக்கிற்கும், அமீர்கானுக்கும் இடையே கள்ளக்காதல் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த கள்ளக்காதலால் அமீர்கானுக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சினை  உருவாகி  கிரண் பற்றிய செய்திகளும் வெளியாகியது. ஆனால், இதையெல்லாம் அமீர்கான் கண்டுகொள்ளவில்லை. 


 
இந்த தகவலை எல்லாம் மறுத்துள்ளார் பாத்திமா. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், இந்த வதந்தி மிகவும் வித்தியாசமானது. என் அம்மாவும் டி.வி பார்த்துக் கொண்டே இருக்கிறார். அம்மாவும் என்னிடம்  ‘உன் புகைப்படம் வந்து இருக்கிறது என்று எனக்குக் காட்டினார். ‘என்ன எழுதியிருக்கிறார்கள்  என்று தலைப்பை படித்து காட்டினார். நான் கண் கலங்கிவிட்டேன்,  இந்த வதந்தி குறித்து நானே விளக்க வேண்டும் என நினைத்தேன் என்று கூறிய அவர் .
 
நான் இந்த வதந்தியால் மிகவும் பாதிக்கப்பட்டேன். மக்கள் எதையாவது கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். அதனால் இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் விளக்கம் அளிக்கப் போவது இல்லை , நான் நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாத்திமா சனா கூறியுள்ளார். 


 
தன்னை  பற்றி இவ்வளவு பூதாகரமான கிசு கிசு பரவி தலைப்பு செய்தி ஆகிவரும் நேரத்தில்  பாத்திமா இப்படி அலட்சியமாக பதிலளித்துள்ளதால் நெட்டிசன்கள் பலர் அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது என கிண்டலடித்து வருகின்றனர்.