மேற்கு வங்க மாநில அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மேற்குவங்க அரசு பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாகவும், இம்மாநிலத்தை ஏற்கனவே ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் அரசைப் போன்று, மம்தா பானர்ஜி அரசும் ஜனநாயகத்தை நசுக்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் தாகூர்நகரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி அதன்பின்னர் துர்காபூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜகவினர் மீது மக்கள் அன்பு செலுத்துவதை தாங்கிக்கொள்ள முடியாத மேற்குவங்க, முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், மேற்குவங்கத்தில் உள்ள கிராமங்கள் வளர்ச்சியின்றி புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பது துரதிஷ்டமானது
4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்து பேசி கொள்ள முடியாத நிலையில் இருந்த 23 எதிர்கட்சி தலைவர்கள் கடந்த மாதம் மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் ஒருங்கிணைந்தது ஏன்> என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி நான்கு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து தற்போது ஆரத்தழுவிக் கொள்வது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் பிரதமர் மோடி கூறினார்.