தொடர்புடைய செய்திகள்
- அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா
- காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி
- பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது: துணை முதல்வர் உதயநிதி
- அம்பேத்கர் பெயரை சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது.. அமித்ஷாவுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம்..!
- என்னுடைய அடுத்த படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன… அட்லி கொடுத்த அப்டேட்
அம்பேத்கர் - அமித்ஷா விவகாரம்: கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை..!
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார்.
அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.
நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.
Edited by Siva
