தொடர்புடைய செய்திகள்
- சிவகங்கை மாவட்ட 20 கிராமங்களில் தொடர் மின்வெட்டு: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு..!
- மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு! – வெளியானது பட்டியல்!
- ஜோடியாக வரும் கல்லூரி மாணவர்கள் விரட்டப்படுவார்கள்: பேருந்து நிலையத்தில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!
- சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி , மயக்கம் !
- மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி: நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு..!
+2 மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!
தமிழகத்தில் உள்ள +2 மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் தொடங்க ஏற்பாடு செய்யுமாறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் +2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் தொடங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 30-ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. +2 மாணவர்களுக்கு ரிசல்ட் உள்பட பல்வேறு தகவல்கள் இனி மின்னஞ்சல் மூலம் அனுப்ப வாய்ப்பு இருப்பதால் அனைவருக்கும் மின்னஞ்சல் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நாளை முதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் தொடங்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
