1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (20:57 IST)

மகளிர் உரிமைத்தொகை: முதல் கட்ட விண்ணப்ப பதிவு தேதி அறிவிப்பு..!

மகளிர் உரிமைத்தொகை முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், 2வது கட்டம் ஆகஸ்ட் 16ம் தேதி வரை வரையிலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை என்றும், விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீட்டிற்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக எடுத்து வர அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையும் மாநகராட்சி நிர்வாகம்
அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran