1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
 தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பட்ஜெட்டின் போது தேவைப்படும் தகவல்களை சேகரிக்க அனைத்து துறை செயலாளர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த காலத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது