செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (19:00 IST)

சென்னை தி.நகர், மாம்பலம் பகுதியில் நாளை மின்வெட்டு

சென்னை தி.நகர், மாம்பலம் உள்பட ஒரு சில பகுதிகளில் நாளை மின் வெட்டு என மின்வாரிய துறை அறிவித்துள்ளது இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
 
சென்னையில் நாளை (18-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
 
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
 
அடையார்/ஈஞ்சம்பாக்கம் பகுதி: பாரதி அவென்யூ, ஈ.சி.ஆர் (ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை), விமலா கார்டன், ராஜீவ் அவென்யூ, அக்கரை கிராமம், குனால் கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
 
தாம்பரம்/பள்ளிகரனை பகுதி: 200 அடி ரேடியல் ரோடு, அக்ஷயா பிளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
 
தி.நகர்/மேற்கு மாம்பலம் பகுதி: மேட்லி தெரு (1 மற்றும் 2வது) தெரு, முத்துரங்கன் சாலை, நியுபோக் சாலை, வி.எம் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, காமராஜர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
 
செம்பியம்/ரெட்டேரி பகுதி பெரம்பூர் / சி.எம்.பிடிடி: வ.உ.சி தெரு, எல்.என்.பி கோயில் தெரு, நேதாஜி தெரு, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, செகரேட்ரியட் காலனி, பி.ஆர்.எச் மெயின் ரோடு, தேவிநகர், 200 அடி சாலை, குமரன் நகர், ரோஜா நகர், ஜோதி நகர், பச்சையப்பன் காலனி கொளத்தூர் செல்வம் நகர், நடேசன் தெரு, கார்த்திக் தெரு, இராமசாமி தெரு, ஸ்ரீராமன் சாலை ஐ.பி.எல் கிருஷ்ணன் தெரு, டீச்சர்ஸ் காலனி, மூலக்கடை, வடிவுடை அம்மன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.