மாணவர்கள் இனி பேருந்துகளில் தொங்கி கொண்டு போக முடியாது: அதிரடி அறிவிப்பு
மாணவர்கள் இனி பேருந்துகளில் தொங்கி கொண்டு போக முடியாது: அதிரடி அறிவிப்பு
சென்னை பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவு உள்ள பேருந்துகளாக மாற்றப்படும் என்றும் கதவுகள் மூடிய உடன் தான் பேருந்துகள் நகர வேண்டும் என ஓட்டுநருக்கு அறிவுறுத்தல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நகரப் பேருந்துகளில் தானியங்கி கதவு அமைக்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து பெயர்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டவுடன் மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.