கட்சி நிகழ்ச்சியில் விதி மீறியதால் நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு

khusboo
Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (16:15 IST)
நெல்லையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு இரவு 10 மணியை கடந்த பிறகும் கூட்டத்தில் பேசியதால் குஷ்பு உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்  நடிகை குஷ்பு கலந்து கொண்டார். போலீஸார்  இரவு 10 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்தனர். 
 
ஆனால் குஷ்பு இரவு 10 மணியை கடந்த பிறகும் கூட்டத்தில் பேசினார்.  போலீசார் உடனடியாக கூட்டத்தை முடிக்க சொல்லி  வலியுறுத்திய போதிலும் குஷ்பு இரவு 10.30 மணியை கடந்த பிறகுதான் தனது பேச்சை முடித்தார். இதனையடுத்து முக்கூடல் போலீசார் குஷ்பு உள்பட 10 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :