அதிமுக ஒன்றுபட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பேசிவரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலமாக மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்கி விட்டன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவின் இணைய காய் நகர்த்தி வருகிறார். சசிகலா ஆதரவாளர்களோ அதிமுகவிற்கு மீண்டும் சசிக்கலா தலைமையேற்க வேண்டும் என போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பதவிக்காகவும், பணத்திற்காகவும் கழகத்தை காட்டிக் கொடுத்தத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல கால வெள்ளத்தில் அடிப்பட்டி சென்றுவிட்டது.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றாக இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இதன்மூலம் சசிக்கலா, ஓபிஎஸ்ஸை எந்நாளும் அதிமுக ஏற்காது என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K