இந்தியாவிலேயே தமிழக சட்டசபை தான் நேர்மையாக செயல்படுகிறது.. சபாநாயகர் அப்பாவு..!
இந்தியாவிலேயே தமிழக சட்டமன்ற சபை தான் நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்படுகிறது என தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார்.
நேற்று நெல்லையில் நிருபர்களை சந்தித்த அவர், "இந்திய அளவில் சட்டசபைகளில் நடுநிலையோடு, நேர்மையாக, சுதந்திரமாக நடத்துவதில் தமிழக சட்டமன்றம் தான் சிறந்தது" எனச் செயற்கை நுண்ணறிவு தளங்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தளங்களில் இதற்கான தகவல்கள் தேடப்பட்டபோது, அந்த தளங்கள் அதை மறுத்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
அப்பாவு அவர்களின் இந்த பேட்டி வெளியானதும், சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், "செயற்கை நுண்ணறிவு தளங்களில் இந்தியாவின் சிறந்த முறையில் சட்டசபை நடத்தும் மாநிலம் எது? என்ற கேள்விக்கு தமிழகத்தை எந்த தளமும் குறிப்பிடவில்லை" என நெட்டிசன்கள் கருத்து பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், "தமிழகத்தை பொறுத்தவரை சிறந்த சபாநாயகர் யார்?" என்ற கேள்விக்கு, செயற்கை நுண்ணறிவு "பி. எச். பாண்டியன்" என்று பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva