திங்கள், 10 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2025 (09:27 IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் அதிமுக விழா! புறக்கணித்த செங்கோட்டையன்! - எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி?

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை நிர்வகிப்பதில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே எழுந்து பிரச்சினையில் கட்சி பிளவுப்பட்டது. இருந்தாலும் அதிமுகவின் பெரும்பான்மையானோரை ஒன்றிணைத்து கட்சியை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 

 

இந்நிலையில் இன்று அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. அதில் அதிமுகவின் அடையாளங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் படங்கள் இடம்பெறாமல் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதனால் கோபமடைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர் “நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை” என்று கூறியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முந்தைய அடையாளங்களை கைவிட்டு தன்னைத்தானே அதிமுகவின் அடையாளமாக மாற்றிக் கொள்ள திட்டமிடுகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K