அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் பணம் , நகை பறிமுதல் !ஐடி துறையினர் அதிரடி!
அதிமுக முன்னாள் அமைச்சரும் நன்னிலம் தொகுதி எம்.எல்..ஏவுமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை உண்வு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறைப் பதவியில் இருந்த காலக்கட்டத்த்ல் வருமாத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்து தெரிந்தது. இந்த நிலையில், காமராஜிடம் ரூ.58.44 கோடி அளவு சொத்துக் குவித்திருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், காமராஜின் வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள் வீடுகள், மகன் கள் வீட்டுகளிலும் சோதனை மேற்கொண்டனர் ஐடி துறையினர். இதனையடுத்து 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 8 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் ரூ.41.06 லட்சம் 963 சவரன் நகைகள், 23.96 கிலோ வெள்லி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.