1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A raid in former minister kamaraj

இன்னொரு அதிமுக முன்னள் அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு

kamaraj
ஏற்கனவே கடந்த சில மாதங்களில் ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
 
முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்கள் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்து.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மாஸ்க் போடாதவர்களிடம் ரூ.1,97,000 வசூல்! சென்னையில் கறார்!!