1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மே 2022 (15:58 IST)

“உடனிரு எப்போதும்”… மனைவியின் நினைவுநாள்… அருண் ராஜா காமராஜ் உருக்கமான பதிவு!

இயக்குனர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த வாரம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பின் போது தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் இப்போது அவர் மறைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதை அடுத்து அருண் ராஜா காமராஜ் டிவிட்டரில் மனைவி குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து அதில் மேலும் ‘
உடனிரு எப்போதும் உடைந்திடா
உண்மையாய்
உடைத்திடா மென்மையாய் ..
ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ
நீயே அரணாய் எனை ஆள..
உடனிரு எந்நாளும் பாப்பி’ என எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.