திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 மே 2023 (15:14 IST)

மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Agni star
மே மாதம் நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் தொடங்கும் என்றும் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்பது தெரிந்ததை. 
 
அந்த வகையில் மே நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நீடிக்கிறது என்றும் அக்னி நட்சத்திரம் நேரத்தில் பொதுமக்கள் முன் ஜாக்கிரதை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அக்னி நட்சத்திர நேரத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும் எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிந்தவரை வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மே மாதம் நான்காம் தேதி வியாழக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குவதை அடுத்து தமிழ்நாட்டில் உச்சபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva