1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 28 மே 2022 (08:00 IST)

இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திர வெயில் காலம்: மக்கள் நிம்மதி

heat
கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் குறிப்பாக அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வந்த நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
அக்னி நட்சத்திர காலத்தில் முதல் இரண்டு வாரங்களாக அசானி புயல் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது. இருப்பினும் கடந்த 24ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தியது என்பதும் குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை அடுத்து படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது