அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்
பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மற்றும் சமூக சேவகியான டாக்டர் சாந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது
வாழும் அன்னை தெரசா வாழ்ந்து கொண்டிருந்த சாந்தா அவர்களின் உயிர் இழப்பு மனித குலத்திற்கே பேரிழப்பு என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பழைய அடையார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீண்ட வரிசையில் அவருடைய உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
மருத்துவ சேவைக்காக மகசேசே விருது, பத்ம பூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது/ விருதுகள் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் அவர் புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டாக்டர் சாந்தா அவர்களின் தாத்தாவின் சகோதரர்தான் சர் சிவி ராமன் என்பது குறிப்பிடதக்கது. புற்றுநோய் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை செய்து ஏராளமான கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார் என்பதும் அந்த கட்டுரைகள் உலகப்புகழ் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. சாந்தாவின் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்