செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:36 IST)

கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் தந்தை மறைவு!

கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் தந்தை மறைவு!
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தந்தை ஜெட் ஸ்டோக்ஸ் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 65 
 
கடந்த சில வருடங்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனையடுத்து தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஜெட் ஸ்டோக்ஸ் அவர்கள் அவர்களும் ஒரு விளையாட்டு வீரர் என்றும் அவர் ரக்பி விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்ஸ் தந்தை ஜெட் ஸ்டோக்ஸ் அவர்கள் காலமானதை அடுத்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்