1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 ஜனவரி 2021 (17:20 IST)

மெக்ரத்தின் அறக்கட்டளைக்கு சச்சின் உதவி!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்ராத் நடத்தி வரும் புற்றுநோய் அறக்கட்டளைக்கு சச்சின் டெண்டுல்கர் உதவி செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் மனைவி ஜேன் மார்பக புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தார். இதையடுத்து அவர் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வண்ணம் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளைக்காக அவர் ஆன்லைன் மூலமாக நிதி திரட்டி வருகிறார்.

இந்நிலையில் மெக்ராத்தின் அறக்கட்டளைக்கு உதவும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தான் கையெழித்திட்ட ஜெர்ஸியை ஏலம் விட்டு அதன் மூலம் நிதி திரட்டிக் கொள்ளுமாறு கொடுத்துள்ளார்.