செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (17:13 IST)

17 பேருக்காக வாதாட மாட்டோம் - வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது.

 
சென்னை அயனாவரம் அடுக்கு மாடி குடியிறுப்பில் வசித்து வரும் ஒருவரின் 12 வயது மகளை, அவர் காது கேட்கும் திறன் இல்லாதவர் என தெரிந்தும் அங்கு பணிபுரியும் லிஃப் ஆபரேட்டர், செக்யூரிட்டி, பிளம்பர் என 17 பேர் கடந்த  6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் வெளியே அழைத்து வந்த போது வழக்கறிஞர்கள் சிலர் அவர்களை கடுமையாக தாக்கினர். 
 
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் “அந்த 17 குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள். அப்படி மீறி ஆஜரானால், அவர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள். அதையும் மீறி ஆஜரானால் அதை கடுமையாக எதிர்ப்போம். சிறுமியின் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உதவிகள் இலவசமாக செய்யப்படும்” என தெரிவித்தார்.