வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (09:31 IST)

பாவ மன்னிப்பு கேட்ட பெண் - மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள்

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் மாறி மாறி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு பாதிரியாருடன் தொடர்பு இருந்துள்ளது. பின் அந்த பெண்ணிற்கு திருமண நடைபெற்றது.
 
இந்நிலையில் அந்த பெண் தனது மகளுக்கு கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலங்கரா ஆர்தாடக்ஸ் தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்த போது, அந்த பெண்ணிற்கு மன உளைச்சல் அதிகமானதால் அங்கிருந்த ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார்.
 
இதனையறிந்த அந்த பாதிரியார் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து பல பாதிரியார்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை வைத்து மிரட்டி அப்பண்ணை டெல்லியில் உள்ள பாதிரியார் உட்பட 5 பாதிரியார்கள் மிரட்டி கற்பழித்துள்ளனர்.
இந்த தகவல் அப்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் தன் மனைவியிடம் இதுபற்றி கேட்டுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை தன் கணவரிடம் கூறி அழுதுள்ளார் அந்த பெண். அவர் உடனடியாக இதுகுறித்து ஆர்தாடக்ஸ் தேவாலய தலைவருக்கு  புகார் அளித்தார்.  
 
மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.