செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை!!

மருத்துவ உணவாக பயன்படுகிறது. பிரண்டையை துவையல், குழம்பு, தோசை என்று பலவிதத்தில் பயன்படுத்தலாம். கலோரி குறைந்த எளிதில் ஜீரணிக்கக் கூடிய, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது.
உடைந்த எலும்புகளுக்கு பிரண்டை கொண்டு தயாரித்த எண்ணெய், சாறு பயன்படுகிறது. வாரம் 2 முறை பிரண்டையை  பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல்  வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம்.
 
எடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து  அதிக கொழுப்பைக் கரைக்கிறது.  இதனால் பருமன் மற்றும் ஊளைச்சதை குறைகிறது. 
 
நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை. இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு  பிரண்டை நல்ல  கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது.
 
அஜீரணத்தை குணப்படுத்தி பைல்ஸ் எனும் குடல் நோயையும் குணப்படுத்துகிறது. பெண்களுக்குரிய மாதவிடாய் பிரச்னை - குறிப்பாக அதிக ரத்தம் போவதையும் குணப்படுத்துகிறது. பிரண்டை ஜூஸ் மூக்கில் ரத்தம்  வடிவதைக் கட்டுப்படுத்துகிறது. சித்த மருத்துவத்திலும் நாடி வைத்தியத்திலும் பிரண்டை மிக முக்கியமான மருந்தாக பயன்படுகிறது. உடலில் உள்ள  தேவையற்ற தண்ணீரை வெளியேற்றக்கூடியது.
 
புற்றுநோய்க்குக் கொடுக்கப்படுகிற மருந்துகளிலும் பிரண்டையின் பங்கு இருக்கிறது. குடல் புழுக்களைக் கொல்கிறது. பசியைத்  தூண்டுகிறது.  நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. குழந்தையின்மையை குணப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.
 
பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும். மேலும் ஈறுகளில் ரத்த கசிவை  நிறுத்தவும், வாயு பிடிப்பை போக்கவும் பிரண்டை உதவுகிறது. ஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.