1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (08:21 IST)

கமல்ஹாசன் கட்சியில் இருந்து திடீரென விலகிய பிரபலம்

நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கினார். அவரது கட்சியின் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடந்தன. இருப்பினும் அவரது கட்சி பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க இணையதளங்கள் மூலம் நேரிலும் கட்சி தொண்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் திடீரென விலகியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அதனால் அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் வழக்கறிஞர் ராஜசேகர் கூறியுள்ளார். கட்சி தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே முக்கிய பிரபலம் ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.