செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (21:19 IST)

சென்னை ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் கைது

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்றும், பாலியல் பலாத்காரம் செய்தால் ஆயுள் தண்டனை என்றும் இன்றுதான் புதிய சட்டம் இயற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் கொடுத்துள்ளார்.
 
ஆனால் சட்டத்தின் சீரியஸ் தன்மை தெரியாமல் இன்னும் சிறுமிகளை பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக சட்டத்தை காக்க வேண்டிய வழக்கறிஞர் ஒருவரே இதுகுறித்த வழக்கு ஒன்றில் சற்றுமுன் கைது செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
 
இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்தை ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்