செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (10:55 IST)

‘பிக் பாஸ்’ டீமுக்கு விருது

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு, விஜய் டிவி விருது கொடுத்துள்ளது. 
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான்  ஓவியாவுக்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கள். ‘ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவுக்கு ஒருவருக்கு ரசிகர்கள் உருவானது இந்த நிகழ்ச்சியின் மூலம் தான்.  அதேசமயம், காயத்ரி, ஜூலி, ஷக்தி வாசு மீது ரசிகர்களுக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படக் காரணமானதும் இந்த நிகழ்ச்சி தான்.
கடந்த வருடம் இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது. அடுத்த சீஸன் எப்போது தொடங்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், ‘சேனலின் பெருமை’ என்ற விருது ‘பிக் பாஸ்’ டீமுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.